tamilnadu

img

அரசு ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள்

தஞ்சாவூர், அக்.1- தஞ்சாவூரில் கடந்த செப் 27, 28, 29 ஆகிய 3 தினங்கள் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 13 ஆவது மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  மாநிலத் தலைவராக மு.அன்பரசு, பொதுச் செயலாளராக ஆ.செல்வம், மாநில பொருளாளராக மு.பாஸ்கரன், மாநில துணைத் தலைவர்களாக மொ.ஞானத்தம்பி, ஏ.பெரியசாமி, கோ.பழனியம்மாள், மு.சீனிவாசன், ஆர்.மங்களபாண்டியன், என்.வெங்கடேசன், மாநிலச் செயலாளர்களாக சி.ஆர்.இராஜகுமார், சி.பரமேஸ்வரி, இரா.ந.நம்பிராஜன், உ.சண்முகம், தெ.வாசுகி, சி.எஸ்.கிறிஸ்டோபர், மாநில தணிக்கையாளர்களாக எஸ்.முபாரக் அலி, கு.மகாலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.