tamilnadu

img

அரசு ஊழியர் சங்க மாநாடு

நாகப்பட்டினம், ஆக2- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு, வட்டத் தலை வர் பழ.பக்கிரிசாமி தலைமையில் வேதாரணியத்தில் வெள்ளி க்கிழமை நடைபெற்றது. வட்டத் துணைத் தலைவர் பி.பன்னீ ர்செல்வம் வரவேற்றார். முன்னாள் வட்டச் செயலாளர் எம்.ஜி. இராமமூர்த்தி துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் வே.கணேசன் வேலை அறிக்கையும், பொருளாளர் ஜி.பழனித்துரை நிதிநிலை அறிக்கையும் முன்வைத்தனர். வட்ட நிர்வாகிகள் வி.எஸ்.இராமமூர்த்தி, வி.விஜயசாரதி, ஆர். பாஸ்கரன், எஸ்.ஜெயகுமார், எஸ்.துர்காம்பிகா, கே.முரு கானந்தம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தணி க்கையாளர் வி.தங்கராசு, சாலைப் பணியாளர் சங்க உட்கோ ட்டத் தலைவர் கா.ராதாராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். மீன்வளத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலை வர் ரா.நடேசராஜா சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் நிறைவுரை யாற்றினார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள், 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை ஆகிய வற்றை உடன்  அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டப் பொரு ளாளர் ஜி.பழனித்துறை நன்றி கூறினார்.