tamilnadu

img

4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 2- தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத் தில், 8 மாவட்டங்களில் கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள 4 மாவட்டங்களில் அதிகன மழைக்கும் வாய்ப்பிருப்பதாக, சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்தி ருக்கிறது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த  இரண்டு நாட்களாக, பரவலாக, பெரும்பா லான மாவட்டங்களில், கனமழை பதிவாகி  வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்  பாக்கத்தில், இந்திய வானிலை, தென்மண்  டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியா ளர் களை சந்தித்தார். அப்போது, “தென்  மேற்கு வங்கக்கடல் பகுதியிலும், இலங் கையை ஒட்டியுள்ள தென் தமிழக கட லோரப் பகுதிகளிலும் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது” என்றார்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியி லும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி  நிலவுவதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கும், 4 மாவட்டங்களில் அதிகன மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் பால சந்திரன் தெரிவித்தார்.  மன்னார் வளைகுடா, குமரிக் கடற்  பரப்பில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக் கூடும் என்றும், எனவே மீனவர்கள் அந்த  பகுதிகளுக்கு அடுத்து இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரை, பொதுவாக வானம் மேகமூட்டத்து டன் காணப்படும் என்றும், இடைவெளி விட்டு லேசான மழை முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த  அக்டோபர் 1 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை யிலான காலகட்டத்தில், இயல்பைவிட, 11 விழுக்காடு அளவிற்கு கூடுதலாக வட கிழக்குப் பருவமழை பதிவாகியிருப்பதாக, வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் சென்னையில், 8 விழுக்காடு அள விற்கு குறைவாக மழைபதிவாகியிருப்ப தாகவும் அவர் கூறியிருக்கிறார்.