தமிழக முதல்வர் 13 நாட்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் வளத்தை பெருக்க, மூலதனத்தை திரட்டச் சென்றதாக கூறுகிறார்கள். பாதி அமைச்சர்கள் வெளிநாடுகளில் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பல சர்க்கரை ஆலைகள் உட்பட 123 அரசு நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. பல தனியார் தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. ஸ்ரீ பெரும்புதூரில் பெரும்பாலான தொழிற்சாலை கள் மூடப்பட்டுள்ளன அல்லது உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. கோவை யில் இன்ஜினியரிங் தொழில், திருப்பூரில் பின்னலாடை தொழில் உள்பட பல இடங்களில் தொழில் நெருக்கடி ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு முதலாளிகளுக்கு சலுகை வழங்கி தொழிலை மேம்படுத்த வேண்டும். முதல்வரின் பயணம் சுற்றுலாவிற்கு பயன்படுமே தவிர தொழில் வளர்ச்சிக்கு பயன்படாது. தொழிற்சாலைகள் மூடியதால் வேலையிழந்த 5 லட்சம் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.