tamilnadu

img

சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

சென்னை, மார்ச் 25- மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள்  மூடப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகம் வளா கத்தில் அமைந்துள்ள மாநில  அவசர கட்டுப்பாட்டு மையத்தில் 144 தடை உத்தரவு  தொடர்பாக எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய் துறை  அமைச்சர் ஆர்.பி. உதய குமார், வருவாய் நிர்வாக  ஆணையர் ராதாகிருஷ் ணன், பேரிடர் மேலாண்மை  இயக்குனர் ஜெகன்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோ சனை மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், 144 தடை  உத்தரவு அமலில் உள்ளது. இதற்கு மக்கள் முழு ஒத்து ழைப்பு அளித்து வருகின்ற னர்,  வருவாய் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வருவாய் துறையினர் ஊரடங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அத்தியாவசியமான பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய  முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உணவு இல்லாமல் இருப்ப வர்களுக்கு சமுதாய சமைய லறை மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் 37 வருவாய் மாவட்டங்களிலும் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு கண்கா ணித்து வருகிறோம் என்றார். 16,243 வருவாய் கிரா மங்களில் மக்களுக்கு தேவை யான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதும், மக்களே தானாக முன்வந்து இதனை பின்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகி றோம். எல்லா நிலைகளிலும் சமூக இடைவெளி என்பதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சமூக இடை வெளி கடைபிடிக்க முடிய வில்லை என்றால் அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். உதராணமாக புதன்கிழமை (மார்ச் 25) காலை மாட்டுத் தாவணி மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்  தால் அங்கிருந்த 300 கடை களையும் உடனடியாக மூட உத்தரவிட்டோம். எனவே சமூக இடைவெளியை அனைத்து நிலைகளிலும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

;