தஞ்சாவூர், மே 5- தமிழக அரசின் அறிவிப்பின்படி ஊரடங்கு உத்த ரவு தளர்வில், அறிவிக்கப்பட்டுள்ள கடைகளில் பணியாளர்கள் மற்றும் பொருள் வாங்கும் பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக சமூக இடை வெளி கடைபிடித்தல் மற்றும் முக கவசம் அணிதல் வேண்டும். முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அல்லது வாடிக்கையாளர்களுக்கு கடையின் உரி மையாளர்கள் பொருட்களை வழங்கக் கூடாது. முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொ ருட்களை வழங்க வேண்டும். வணிக நிறுவ னங்கள், மருந்துக் கடைகள், அத்தியாவசிய பொ ருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் நிரப்பும் இடங்கள் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதை தொடர்ச்சியாக நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.
மேலும், தற்போது உள்ள மூன்று வண்ண அடை யாள அட்டை திட்டம் தொடர்ச்சியாக நடைமுறை யில் இருக்கும். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற வெளியில் வர வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 நாட்களில் மட்டுமே வெளியில் வர வேண்டும். ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் அதனை மீறுவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளவரை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என கொரோனா தடுப்பு மண்டல குழு கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.