tamilnadu

img

சமூக இடைவெளியை கடைப் பிடிக்கவில்லை எனில் என் மீது  நடவடிக்கை கோரி பத்திரிகையில் செய்தி வரும்... அமைச்சர் சீனிவாசன் பேச்சு

திண்டுக்கல்:
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இல்லையெனில் என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கைகளில் செய்தி வரும் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசினார்.      

திண்டுக்கல்லில் புதனன்று துப்புரவு பணியாளர்களுக்கும்  பகுதி மக்களுக்கும் அரிசி ,பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்க வந்த வனத்துறை அமைச்சர்  பேசியதாவது
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொ ரோனா  பாதிப்பு உள்ளவர்கள் 80 பேர்  . அதில் தற்போது 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  பதினோரு பேர் சிகிச்சையில் உள்ளனர். நமது மாவட்டம் சிவப்பு பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மஞ்சள் பகுதியாகவும் பச்சை பகுதியாகவும் மாறும்.  மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரு பத்திரிகையில் சீனிவாசன் மீது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா  என்று எழுதுகிறார்கள்.  பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுத்துவிடுகிறார்கள் அதனால் யாரும் தப்பிக்க முடியாது.
ஒவ்வொருவராக தள்ளி நில்லுங்க .மே 3ஆம் தேதி ஊரடங்கு முடியப்போகிறது. நமது மாவட்டத்தில் அதிகமாக வைரஸ் தொற்று வரவில்லை. அரசாங்கம் அறிவித்த நடைமுறைகளை இந்த 28 நாட்களில் நாம் முறையாக கடைபிடித்ததால் அதிகமாகத் தொற்று பரவ வில்லை.  தூய்மை பணியாளர்கள் உடலை வருத்தி பணியாற்றி நாம் எல்லோரையும் காப்பாற்றி இருக்கிறார்கள் என்றார்.

பிறகு துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து அரிசி, பருப்பு ,காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார் .திண்டுக்கல் நகரத்தில் 16 டிவிசன்கள் உள்ளன. இதில் பணியாற்றும் 500 துப்புரவு பணியாளர்களுக்கு சேலை வேட்டிகள் வழங்கினார்.கோவிந்தபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் ஆயிரம் பேருக்கு அரிசி ,பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுபொருட்கள் வழங்கப்பட்டன