இராமநாதபுரம், ஜூன் 25- இராமநாதபுரத்தில் கடற்படை தளத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 29 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இந்தி யாவிலேயே அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் மூன்றாவது இட த்தில் உள்ளது தமிழகம். இதுவரை 67,468 பேர் பாதிக்கப்பட்டு 866 பேர் உயிரிழந்துள்ளனர். . இந்த நிலையில், இராம நாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி யில் உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படைத் தளத்தில் 41 வீரர் களுக்கு கொரோனா பரிசோத னை நடந்தது. இதில் 29 வீரர் களுக்கு தொற்று இருப்பது கண்ட றியப்பட்டுள்ளது.
இரமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 23-ஆம் தேதி வரை 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 24-ஆம் தேதி ஒருவருக்கு தொற்று கண் டறியப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 338 ஆக அதி கரித்தது. வியாழனன்று 29 விமானப்படை வீரர்கள் மற்றும் 61 பேருக்கு தொற்று உறுதியாகி யுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 428 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் கூறுகையில், “இந்த வாரத்தில் பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த 102 பணியாளர்கள் ஐ.என்.எஸ். வந்தார்கள், அவர் கள் அனைவரும் தனிமைப்படுத்த ப்பட்டனர் மற்றும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட னர். பாதிக்கப்பட்டவர்கள் மண்ட பம் கொரோனா பராமரிப்பு மைய த்தில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர். மீதமுள்ள 73 பணி யாளர்கள் தனிமைப்படுத்தப்படு வார்கள்” என்றார்.