சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின்
திண்டுக்கல்,டிச.19- தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) திண்டுக்கல் கோட்ட அலுவலகமான தோழர் வி.பி.சிந்தன் இல்லம் திறப்பு விழா திண்டுக்கல்லில் வியாழனன்று நடைபெற்றது. அலுவலகம் மற்றும் வி.பி.சிந்தன் சிலையை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் திறந்துவைத்தார். இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் ஐ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் என்.ராமநாதன் வரவேற்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் கே.முத்துராஜ் கொடியேற்றினார். சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், சம்மேளன உதவித்தலைவர்கள் எம்.சந்திரன், ஏ.பி.அன்பழகன், வி.பிச்சை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.இராஜேந்திரன், சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன், சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், தேனி மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர். சங்க பொருளாளர் எஸ்.ஜோசப் அருளானந்து நன்றி கூறினார்.
தோழர் வி.பி.சிந்தன் சிலையை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்து மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.