tamilnadu

இராமநாதபுரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிதிட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு இராமேஸ்வரம் இராமநாlதசுவாமி கோயில்சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்ட கொ.வீரராகவ ராவ், அமைச்சர்கள் ஆர்.பி. உதயக்குமார், பாஸ்கரன் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.மணிகண்டன், என்.சதன் பிரபாகர், காவல் துறை துணைத் தலைவர் என்.எம்.மயில் வாகனன், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து ரூ.70.54 கோடி மதிப்பில் 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.24.24 கோடி மதிப்பில் 844 முடிவுற்ற 844 திட்டப் பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தார். பின்னர்இந்திய எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி மனைவி வானதி தேவிக்குகருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி ஆணையை வழங்கினார். தேர்வு செய்யப்பட்ட 15,605 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.167.61 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

;