tamilnadu

img

துப்புரவு பணியாளர்களுக்கு  ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் சேத்தூர் பேரூராட்சி நிர்வாகம்...

இராசபாளையம்: 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்திற்குட் பட்ட சேத்தூர் பேரூராட்சியில்  நிரந்தரப் படுத்தப்பட்ட துப்புரவு பணியாளர்கள், லட்டர் பேடு அளவில் உள்ள மகளிர் குழுவின் பொறுப்பில் இயங்கக்கூடிய நிரந்தர படுத்தப்படாத துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிரந்தர படுத்தப்பட்ட அலுவலர்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் மாதந்தோறும் ஊதியம் அவர்களது வங்கி கணக்கில்  ஏற்றப்படுகின்றது. ஆனால் நிரந்தரப்படுத்தப்படாத துப்புரவு பணியாளர்களுக்கு லட்டர் பேடு மகளிர் குழு மூலம் மாதமாதம் சம்பளம் வழங்கப்படுகிறது.

 மேலும் தற்போது கொரோனாவை ஒட்டி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது ,ஆனாலும் துப்புரவு பணியாளர்கள் முன்னர் செய்த பணியை காட்டிலும் கூடுதலான பணியை செய்து வருகின்றனர், ஆதலால் இவர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் சேத்தூர் பேரூராட்சி நிர்வாகம் லட்டர் பேடு மகளிர் குழு மூலம் இயங்கும் நிரந்தர படுத்தப்படாத தொழிலாளர்களின் மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ராமர் கூறும்போது சேத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தினால் மகளிர் குழு மூலம் நிரந்தரப்படுத்தப் படுத்தப்படாமல் பணிபுரிந்து வருகிற துப்புரவு பணியாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் ஏப்ரல் 15ம் தேதி வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அலுவலரிடம் பலமுறை பேசியும் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். மாவட்ட நிர்வாகமும் பொது சுகாதாரத் துறையும்  தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பேரூராட்சி நிர்வாக அலுவல ர்மீது நடவடிக்கை எடுத்து ஊதியம் வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

;