tamilnadu

img

120 சிறப்பு அவசர சிகிச்சை ஊர்திகள்!

சென்னை,ஜூலை 17- மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்  புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், “சென்னை மனநல காப்பகத்தை தரம்  உயர்த்துவதற்காக ஒரு ஒப்புயர்வு மையம் ரூ. 25  கோடியே 41 லட்சம்  செலவில் அமைக்கப்படும்” என்றார். ஆபத்தான நிலையில் உள்ள நோயாளி களை ஒரு மருத்துவமனை யிலிருந்து வேறு உயர்  மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச்  செல்வதற்காக ரூ.120 சிறப்பு வாகனங்கள் ரூ.19  கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்  என்று அவர் தெரிவித்தார். மதுரை மாநகரில் ரூ. 20 கோடியில் உலகத்  தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் நிறுவப்படும்  என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.