tamilnadu

img

சர்வதேச ஆமைகள் தினம் பெரு உயிரியல் பூங்காவில் அனுசரிப்பு

 பெரு நாட்டிலுள்ள உயிரியல் பூங்காவில் சர்வதேச ஆமைகள் தினத்தை யொட்டி, அழிவின் விளிம்பில் இருக்கும் ஆமை இனங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகம் முழுவதும் மே 23ம் தேதி  சர்வதேச ஆமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.  இந்நிலையில் பெரு நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில்  40க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த அரிய வகை ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில்  அழிவின் விளிம்பிலுள்ள மஞ்சள் நிற பாதம் கொண்ட ஆமைகள், கலப்பாகோஸ் தீவிலிருந்து கொண்டு வரப்பட்ட 150 வயதான சான்சோன் ஆமை ஆகியவையும் அடங்கும்.  அந்த  ஆமைகளில் பெரும்பாலானவை செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டவைகளாகும்.
இந்நிலையில் சர்வதேச ஆமைகள் தினத்தையொட்டி, அழிவின் விளிம்பில் உள்ள ஆமை இனங்ளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது உயிரியல் பூங்காவிற்கு வந்த பள்ளி மாணவர்கள் ஆமைகளுக்கு மலர்கொத்துகளை அளித்தனர். அதனை ஆமைகள் உண்டதையும் மாணவர்கள் கண்டு ரசித்தனர். 


 

;