tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 13 இதற்கு முன்னால்

1792 - தற்போது வெள்ளை மாளிகை என்றழைக் கப்படும், அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் இருப்பிடமும், அலுவல கமுமான, ‘யுனைடட் ஸ்டேட்ஸ் எக்சிகி யூட்டிவ் மேன்ஷன்’ கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது அயர்லாந்தில் பிறந்த கட்டிடக்கலைஞரான ஜேம்ஸ் ஹோபன் என்பவரால் அயர்லாந்து அரண்மனையான லெய்ன்ஸ்ட்டர் ஹவுஸ் கட்டிடத்தை மாதிரியாகக்கொண்டு, ரோமானியக் கட்டிடக்கலையின் சாயலுடன் கட்டப்பட்டது. 1800 நவம்பர் 1இல், இரண்டாவது குடியரசுத்தலைவரான ஜான் ஆடம்ஸ்-தான் இதில் முதலில் குடியேறினார். அடுத்த ஓராண்டிலேயே புதிய குடியரசுத்தலைவராகப் பதவியேற்ற தாமஸ் ஜெஃபர்சன், இரண்டு பேரரசர்கள், ஒரு திருத்தந்தை (போப்), ஒரு பெரிய(தலாய்) லாமா ஆகியோர் வசிக்கும ளவுக்குப் பெரியதாக இருப்பதாகக் கூறினாராம்!

இங்கிலாந்து டனான போரில், ஆங்கிலேயர்களால் 1814இல் இது தீக்கிரை யாக்கப்பட்டது. 1817இல் மறுகட்டுமானம் முடியும்வரை, ஆக்டகன் ஹவுஸ், செவன் பில்டிங்ஸ் ஆகியவற்றில் குடி யரசுத்தலைவர்கள் தங்கியிருந்தனர். தீக்கிரையான அடை யாளங்களை மறைக்க வெள்ளை நிறம் பூசப்பட்டதால் இது வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு செய்தி உண்டு என்றாலும், 1811இலேயே இது வெள்ளை மாளிகை என்று அழைக்கப்பட்டதற்குப் பதிவுகள் உள்ளன. ஆனாலும், 1901இல் தனது கடிதத்தாளில் ‘வெள்ளை மாளிகை, வாஷிங்டன்’ என்று தியோடார் ரூஸ்வெல்ட் குறிப்பிடத் தொடங்கும்வரை, ‘பிரெசிடெண்ட்’ஸ் பேலஸ்’, ‘பிரெசி டெண்ட் மேன்ஷன்’, ‘பிரெசிடெண்ட்’ஸ் ஹவுஸ்’ ஆகிய வையே அதிகாரப்பூர்வ பெயர்களாக இருந்தன. முதல் குடியரசுத்தலைவரான ஜார்ஜ் வாஷிங்டனின் மனைவி மார்த்தாவின் வீட்டின் பெயர் ஒயிட் ஹவுஸ் பிளாண்ட்டேஷன் என்பதால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.

உள்நாட்டுப்போர்க் காலத்தில், பல துறைகளும் இங்கேயே செயல்பட்டதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு விரிவாக்கங்கள் செய்யப்பட்டன. 1891இல் குடியரசுத்தலை வராக இருந்த பெஞ்சமின் ஹாரிசனின் மனைவி கரோலின் ஹாரிசன் பரிந்துரைத்த, கிழக்கு, மேற்குக் கட்டிடங்களைக் கட்டுதல் அப்போது ஏற்கப்படாவிட்டாலும், தியோடார் ரூஸ்வெல்ட் பதவிக்குவந்தபின், 1902இல் நிறைவேற்றப்பட்டு, அலுவல்தொடர்பான ஊழியர்கள் மேற்குக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். அவருக்கு அடுத்த குடியரசுத்தலைவரான வில்லியம் டாஃப்ட், 1909இல்தான் தற்போது அமெரிக்கக் குடி யரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவலகமாகச் செயல்படும் ஓவல் அலுவலகத்தை மேற்குக் கட்டிடத்தில் உருவாக்கினார். பல்வேறு விரிவாக்கங்களைச் சந்தித்த இக்கட்டிடத்தின் மர உத்திரங்கள் தாங்காது என்பதால், 1948இல் கட்டிடத்தின் உட்பகுதி முழுவதும் பிரிக்கப்பட்டு, இரும்பு உத்திரங்களுடன் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் தேசிய பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ள வெள்ளை மாளிகை, தேசிய பூங்காத்துறையால் பராமரிக்கப்படுகிறது.

- அறிவுக்கடல்

;