tamilnadu

img

இந்நாள் மார்ச் 11 இதற்கு முன்னால்

1931 - சோவியத் இளைஞர்களின் உடல் திறன் களை மேம்படுத்த ‘உழைப்புக்கும், பாதுகாப்புக்கும் தயார்நிலை (ஜிடிஓ)’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. சோவி யத்தில் போட்டி விளையாட்டுகள் அப்போதுதான்  வளரத் தொடங்கியிருந்த நிலையில், இத்துடன் தொடங் கப்பட்ட மற்றொரு திட்டமான, ‘சோவியத்தின் ஒருங்கிணைந்த போட்டி விளையாட்டு வகைப்பாட்டு முறை’ என்பதுடன் சேர்ந்து, இது இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தியதே, ஒலிம்பிக் முதலான போட்டிகளில் சோவியத் பெற்றிருந்த முதன்மையிடம், இறுதிவரை அமெரிக்கா அஞ்சுமளவுக்கு செஞ்சேனையின் பலம் ஆகியவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது. 21 சோதனைகளில் வெற்றி பெறுகிறவர்களுக்கு ஜிடிஓ(தகுதி பெற்றதற்கான) பேட்ஜ் வழங்கப்படும்.

போட்டி விளையாட்டுகளுக்கான அமைப்புகள் சோவியத்தில் அதிகம் உருவாகியிராத அக்காலத்தில், இந்த ஜிடிஓ திட்டத்திற்கான சோதனைகள், அனைத்துப் பகுதியி னரின் உடற் தகுதிகளை மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் வழிசெய்தன. இந்த முதல் கட்டத்தில் தேறியவர்களுக்கு, 1932இல் இரண்டாம் கட்டமும் அறிமுகப்படுத்தப் பட்டது. மேலும் 24 சோதனைகளில் வெற்றிபெற்று இரண்டாம் கட்டத்தில் தேறிய வர்களுக்கு, ஜிடிஓ இரண்டாம் கட்டம் என்ற பேட்ஜ் வழங்கப்பட்டது. 1934இல் 13-14, 15-16 வயதுப் பிரிவினருக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. குழந்தைகளுக்கான அத்திட்டத்திற்கு, ‘சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பிற்கும், உழைப்பிற்கும் தயாராதல்’ என்று பெயரிடப்பட்டதுடன், தேறியவர்களுக்கு பிஜிடிஓ என்ற பேட்ஜ் வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது, செஞ்சேனையில் கூடுதல் வீரர்க ளின் தேவையேற்பட்டதையடுத்து, ராணுவத்திற்குரிய தகுதிகளுக்கான சோதனை களும் 1939இல் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. போருக்குப்பின் ஏற்பட்ட சூழ்நிலைக ளுக்கேற்ப, 1946இல் சுகாதாரம், உடல் நலம் முதலானவற்றுக்கான பயிற்சிகளும், சோதனைகளும் சேர்க்கப்பட்டன.

14-46 வயதினருக்காக இருந்த இத்திட்டம், 1972இல் 10-60 வயதினருக்குரியதாக விரிவுபடுத்தப்பட்டதுடன், சோதனை முறை களும் அறிவியல் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டன. வயதின் அடிப்படை யில் 5 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம், வெள்ளி என்ற இரு நிலைகளில் பேட்ஜ்கள் வழங்கப்பட்டன. 1985இல் 7-9 வயதினருக்கும் விரிவு படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட அனைத்து வயதினருக்குமாக மாறியிருந்த இத்திட்டத்தில், ஊனமுற்றவர்களைத் தவிர்த்த சோவியத் குடிமக்களின் பெரும் பாலானவர்கள் தேறியிருந்தனர். சோவியத்தின் வீழ்ச்சிக்குப்பின் இத்திட்டம் கைவிடப் பட்டாலும், 2003இல் ரஷ்யாவில் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போதைய ரஷ்யாவில், அதே பழைய பெயருடன் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுவதாக 2014இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவே, இத்திட்டம் எவ்வளவு சிறப்பான மனித வளத்தை உருவாக்கியது என்பதற்குச் சான்று!

- அறிவுக்கடல்

;