tamilnadu

img

இந்நாள் பிப். 06 இதற்கு முன்னால்

1976 - தங்கள் விமானத்தை வாங்கு வதற்காக, ஜப்பான் பிரதமர் அலுவல கத்திற்கு 3 மில்லியன் டாலர்கள் (தற்போது, ரூபாயில், சுமார் நூறு கோடி!) லஞ்சமாக வழங்கியதாக அமெரிக்க செனட் துணைக்குழு விடம், லாக்ஹீட் விமான நிறுவனத்தின் துணைத்தலைவர் ஒப்புக்கொண்டார். 1950-70 காலகட்டத்தில், அந்நிய அரசு அலுவலர்களுக்கு ஏராளமான லஞ்சம் வழங்கி யிருந்த லாக்ஹீட், அவ்வாறு 22 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,300 கோடி!) லஞ்சமாக வழங்கியிருந்தது, ‘டீல் ஆஃப் த செஞ்சுரி’ என்று குறிப்பிடப்பட்டது. பல்வேறு துறைக ளுக்கான கருவிகளையும் உற்பத்திசெய்யும் ஜெர்மன் நிறுவனமான சீமென்ஸ், உலகம் முழுவதும் அரசு அலுவலர்களுக்கு வழங்கிய லஞ்சம் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் என்பது 2006இல் வெளிப்பட்டதே, இன்றுவரை உலகின் மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படுகிறது.

கி.மு.3100-2700களின் பண்டைய எகிப்தின் நீதித்துறையில் ஊழல் இருந்ததாகக் காணப்படும் குறிப்புகள், மனித வரலாற்றின் தொடக்கத்திலேயே ஊழல் உருவாகிவிட்டதை உணர்த்துகின்றன. சீனப் புராணங்களில் குறிப்பிடப்படும், சமை யலறைக் கடவுளுக்கு இனிப்புகள் அளித்து, வீட்டைப் பற்றிய மதிப்பீட்டை இனிமை யாக்குதல், கிரேக்கப் புராணங்களில் நிலநடுக்கத்தில் அழிந்த அப்பல்லோ ஆலயத்தை ஏல்க்மியானிடீ குடும்பம் சீரமைப்பதற்கு கைம்மாறாக, அவர்கள் ஏதென்சைக்  கைப்பற்றி, ஆள்வதற்கு, தலைமைப் பூசாரியான பைத்தியா (பெண்), ஸ்பார்ட்டாவை உதவச் செய்தது ஆகியவை, அக்காலத்திய லஞ்சத்தின் குறியீடுகளாகக் கருதப்படு கின்றன.

சீர்கேடு, கெட்டுப்போதல் என்று பொருள்படும் கரப்ஷியோ என்ற லத்தீன் சொல்லிலிருந்துதான், ஊழலைக் குறிக்கும் கரப்ஷன் என்ற சொல் உருவானது. திருடுவது, பிச்சையெடுப்பது என்ற பொருள்களைக்கொண்ட பழைய பிரெஞ்சுச் சொல்லான ப்ரைப்-தான் ஆங்கிலத்தில் லஞ்சத்துக்கான சொல்லாகியது. இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சியுடன், உலகம் முழுவதும் ஊழலும் மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. ஆண்டுதோ றும் உலகம் முழுவதும் வழங்கப்படும் லஞ்சம் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி என்று உலக வங்கி கணக்கிட்டுள்ளது. உலகின் ஜிடிபியில் சுமார் 2 சதவீதமான இது, உலகம் முழுவதும் மக்கள் நலனுக்காக வழங்கப்படும் நன்கொடைகளைப்போல 10 மடங்காம்! ‘ஊழல் மலிந்த நாடுகளின் குறியீடு (இண்டெக்ஸ்)’, லஞ்சம் தரத் தயாராக இருக்கும் தொழில்துறையினரைக் கொண்டநாடுகளின் ‘லஞ்சம் தருவோர் குறியீடு’ ஆகியவற்றை ‘டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்’ வெளியிடுகிறது.

- அறிவுக்கடல்

;