tamilnadu

img

அணையா விளக்காய்... (மா சே துங் நினைவு நாள்)

மாற்றம் ஒன்றே மாறாதது என்னும் 
தேற்றக் கொள்கை மார்க்சியம் வெல்லும் 
போற்றும் வர்க்க ஒற்றுமை கொள்ளும்  
ஏற்றம் மிக்க சீனா சொல்லும்

ஈன அடிமை விலங்கு உடைக்க
சீனப் புரட்சி மாவோ படைக்க 
ஏனைய நாடுகள் வியந்து நோக்க 
அணையா விளக்காய் பொதுமை காக்கும் 

ஓராண்டு நடைபயண சீன சரித்திரம் 
பல்லாண்டு பேசும் வீர மந்திரம் 
பொல்லாங்கு எதிர்த்துப் போரிட்ட தந்திரம் 
நல்வாழ்வு மக்கட்கு ஈந்திட்ட நிரந்தரம்

உழைப்பும் லட்சிய வேட்கையும் நம்முன் 
தழைத்து சீனப் பெருஞ்சுவராய் கண்முன் 
உழைத்து வாழும் வர்க்கம் உயர 
இழைத்த தியாகம் சான்றாய் உயர்வாய் 

மார்க்சும் எங்கெல்சும் வகுத்த கொள்கை
மார்க்கம் காட்டிய மண்ணின் தன்மையில் 
மக்கள் சீனம் சான்றாய்த் திகழும் 
மாவோ தியாகம் வாழ்வாய்ப் புகழும்

===பெரணமல்லூர் சேகரன்=== 

;