tamilnadu

img

உலக பணக்கார வரிசையில் 5-வது இடத்தை அடைந்தார் முகேஷ் அம்பானி 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி  வருகிறது.இந்நிலையில் உலக நாடுகள் பல விதமான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. உலகமே கொரோனா பிடியில் உள்ள நிலையில் உலக பணக்கார வரிசையில் முகேஷ் அம்பானி 5-வது இடத்தை அடைந்துள்ளார். 

     கொரோனா பரவலுக்கு பின்னர் ,அரசு ஊரடங்கு அறிவித்து, மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் ,இணையதளம் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.சேர் மார்க்கெட்டில் ஜியோ பங்குகள் அதிகரித்தும்,ஜியோ  9.99% சேர்களை பேஸ்புக் மற்றும் 7.73% சேர்களை கூகுள் நிறுவனமும் வாங்கியுள்ளது.இதை தொடர்ந்து குவால்காம்(Qualcomm) நிறுவனமும் 0.15% சேர்களை வங்கியுள்ளது.

 இதன் காரணமாக ஜியோவின் பங்குகளின் மதிப்பு  உயர்ந்து கொண்டு வருவதால் , முகேஷ் அம்பானி உலக பணக்கார வரிசையில் 6-வது இடத்திலிருந்து 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  இந்நிலையில் மோடி அவருக்கு வேண்டிய நண்பர் நிறுவனமான ரிலையன்சுக்கு அதிக அளவில் சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதால் இந்த வளர்ச்சி என்று பொருளாதார வல்லுநர்கள் பலரும் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர்.


 

  
 

;