tamilnadu

img

உலகிலேயே முதல்முறையாக மலேரியா நோய்க்கான தடுப்பூசி ஆப்பிரிக்காவில் பயன்பாடு

கடந்த 30 வருட ஆராய்ச்சிக்கு பின்பு உலகிலேயே முதல்முறையாக மலேரியா நோய்க்கான தடுப்பூசி ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை மலேரியா நோயால் உயிரிழந்து வருவது தொடர்ந்து மலேரியாவை அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக மலேரியா நீடிக்கச் செய்து வருகிறது. முக்கியமாக ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் மலேரியாவால் உயிரிழப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.


கடந்த 30 வருட ஆராய்ச்சியில் இருந்த RTS,S என்ற தடுப்பூசி வெற்றிகரமாக ஆப்பிரிக்க நாடான மலாவியில் முதல்முறையாக 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மலேரியா நோய் தடுப்பூசி சோதனை பயன்பாடாக அளிக்கப்பட்டுள்ளது. மலாவியின் இந்த முயற்சிக்கு உலக சுகாதார நிறுவனம்(WHO) பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், வரும் வாரங்களில் மற்ற இரு ஆப்பிரிக்க நாடுகளான கானா மற்றும் கென்யா இந்த மலேரியா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.


;