tamilnadu

img

உலகின் மிக இளம் வயது பிரதமர்!

பின்லாந்தில் 34 வயதான சன்னா மரின் என்ற பெண் அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆவார்.

பின்லாந்தில் தற்போது சோசியல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி, அந்நாட்டு தபால் துறை வேலை நிறுத்தத்தை சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த, சோசியல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த 34 வயதான சன்னா மரின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பின்லாந்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் 35 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் அனைவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் சன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் வயது குறைந்த பிரதமர் ஆவார். இதற்கு முன்பு நியூசிலாந்தின் பெண் பிரதமரான ஜசிந்தா ஆர்டர்ன் (37) தான் வயது குறைந்த பிரதமராக கருதப்பட்டார். 
 

;