tamilnadu

img

மருத்துவர் கோட்னீசின் பிறந்தநாள் சீனத் தூதரகத்தில் கருத்தரங்கு

பெய்ஜிங்:
இந்தியாவுக்கான சீனத் தூதரகமும், இந்தியாவிலுள்ள மருத்துவர் கோட்னீஸ் அக்குபங்சர் நலவாழ்வு மற்றும் கல்வி மையமும் இணைந்து மருத்துவர் துவாரகநாத் கோட்னீசின் 110ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் வியாழனன்று காணொலிக் கருத்தரங்கு ஒன்றை நடத்தின.

 இதில், சீனத் தூதர் சுன்வெய்தொங் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கில் சீனா மற்றும் இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தபலரும் இணைய வழியில் கலந்து கொண்டனர்.சுன்வெய்தொங் தனது உரையில், மருத்துவர் கோட்னீஸ் இந்திய மக்களின்தலைசிறந்த பிரதிநிதி என்றும், அவர்சீன-இந்திய நட்புக்கான முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் என்றும் புகழ்மாலைசூட்டினார்.இதில் கலந்து கொண்ட விருந்தினர் கள் கூறுகையில், மருத்துவர் கோட்னீஸ் அமைதிக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்தவர் என்றும், அவரது எழுச்சி, சீன - இந்திய இரு தரப்புறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தனர்.

;