tamilnadu

img

பொலிவியா ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சிபிஎம் கண்டனம்

பொலிவியாவில் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி இவோ மொரேஷ் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“பொலிவியாவில் இவா மொரேஷ் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது, உண்மையில் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான வல்லடி ஆட்சிக் கவிழ்ப்புச் சதியாகும்.  அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் வலதுசாரி சக்திகள் அக்டோபர் 20 அன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து, மிகப்பெரிய அளவில் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டன. ஆயுதப் போலிசாரில் சில பிரிவுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டும், இறுதியில் ராணுவமும் சேர்ந்துகொண்டும் அவரைப் பதவியிலிருந்து இறங்குவதற்குக் கட்டாயப்படுத்தி இருக்கின்றன. 
முன்பு பிரேசிலிலும், அதனைத்தொடர்ந்து ஈக்வேடாரிலும் மற்றும் வெனிசுலாவிலும் முற்போக்கு ஆட்சிகளைக் குறிவைத்து இதேபோன்ற முயற்சிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இப்போது பொலிவியாவில் வலதுசாரி சக்திகளின் வல்லடி ஆட்சிக் கவிழ்ப்பு சதி (coup) நடந்திருக்கிறது. முதல் உள்நாட்டு ஜனாதிபதியான, இவோ மொரேஷ், பொலிவியாவின்  வறுமையை ஒழித்துக்கட்டுவதிலும், நாட்டின் இயற்கை வளங்கள் மீதான தேசிய இறையாண்மையை உத்தரவாதப்படுத்துவதிலும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களைக்  கொண்டுவந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, பொலிவியாவில் நடைபெற்றுள்ள ஆட்சிக் கவிழ்ப்பு சதியைக் கண்டிக்கிறது மற்றும் இவோ  மொரேஷுக்கும் மற்றும் அவருடைய சோசலிசத்திற்கான இயக்கத்திற்கும் (MAS-Movement for Socialism) தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.” இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)   

 

 

ReplyReply allForward

;