tamilnadu

img

ஸ்பெயினில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்...

மாட்ரிட் 
கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடுகள் அதிக பாதிப்பைச் சந்தித்து. பின்னர் ஜூன் முதல் வாரத்திலிருந்து ரஷ்யாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தது. இதனால் ஐரோப்பிய மக்கள் இயல்பு நிலைக்கு சென்றனர். விளையாட்டுத் தொடர்பான நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஜூலை மாத தொடக்கத்திலிருந்து ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதில் முதன்மையாக இருப்பது ஸ்பெயின் தான். ஸ்பெயின் நாடு பச்சை மண்டலம் பெறவில்லை என்றாலும் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 500-க்குள் இருந்தது. ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் 852 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் இதுவரை 3 லட்சத்து 988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 408 பேர் பலியாகியுள்ளனர். 

ஐரோப்பாவின் இரண்டாவது கொரோனா அலையில் ஸ்பெயின் முதன்மையாக உள்ளது. ஸ்பெயினுக்கு அடுத்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், உக்ரைன் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.   

;