tamilnadu

img

ரஷ்யாவில் வேகமெடுக்கும் கொரோனா...  ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் பாதிப்பு...  

மாஸ்கோ 
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 2 வார காலமாக அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் குறுகிய காலத்தில் ரஷ்யா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவில் ரஷ்யாவில் ஒரே நாளில் 11,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு நாடு ஒரே நாளில் 11 ஆயிரம் பேரை கொரோனா நோயாளிகளாக அனுப்புவது இதுவே முதல் முறையாகும். இதன்மூலம் ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 77 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. எனினும் அந்நாட்டின் சிறப்பான மருத்துவச் சிகிச்சையால் உயிரிழப்பு எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. இன்று ஒரு நாளில் 88 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,600-யை தாண்டியுள்ளது. 23 ஆயிரத்து 803 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். தினமும் ரஷ்யாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

;