tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச த்தின் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள் ளார்.

ஒடிசாவுக்கு வடக்கே வங்கக் கட லில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

காஷ்மீர் பிரச்சனை இந்தியா வின் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதனைப் பற்றி சீனா அக்கறை கொள்ளத் தேவையில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் ஆப்பிள் நிறுவனத் திற்கு அடுத்தபடியாக பிராண்ட் எனப்படும் சிறந்த தரத்தின் அடை யாளமாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

அமீரகத்தின் கலீபா சாட் செயற் கைக்கோளானது அபுதாபி மற் றும் துபாய் நகரங்களின் புகைப்படங் களை உயர்தரத்தில் துல்லியமாக அனுப்பியுள்ளது.

மத்திய அரசுக்கு டிவிடெண்ட் வழங்குவது குறித்து, ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கவுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையவழி கல்யாண உற்சவ டிக்கெட்டுகளை (வெள்ளிக்கிழமை) ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிட உள்ளது.

தமிழக போக்குவரத்துத் தொழி லாளர்களின் மாதச் சம்பளத்தில் கடந்த 3 மாதங்களாக பிடித்தம் செய்து வருவது, தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

;