tamilnadu

img

கொரோனாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ்

நாட்டிலேயே முதல் முறையாக ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதல் அசாமில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன.

ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸுக்கும், கொரோனாவுக்கும் தொடர்பில்லை என்ற போதிலும் இந்தியாவில் இந்த ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் கண்டுபிடிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று அசாம் மாநில கால்நடை நலத்துறை அமைச்சர் அதுல் போரா தெரி வித்துள்ளார். இதுகுறித்து அதுல் போரா செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் முதல் முறையாக அசாமில் கண்டறி யப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் 306 கிரா மங்களில் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட பன்றி கள் உயிரிழந்துள்ளன. அதிவேகமாகப் பரவும் வைரஸ் என்பதால், இதைத் தடுக்கும் நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அர சுக்கும் இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 21 லட்சம் பன்றிகள் இருந்தன. இது தற்போது 30 லட்சமாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசுக்கும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அசாமில் கண்டறியப்பட்டது ஆப்பி ரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் என்பதை போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்கள் உயர் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இந்த நோய் தாக்கி னால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதி. ஆதலால், மற்ற பன்றிகளை நோய் தாக்காமல் காப்பது அவசியம் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இருக்கும் அனைத்துப் பன்றிகளின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரி சோதிக்கப்பட்டு வருகின்றன. நோய்த் தொற்றுள்ள பன்றிகளை மட்டும் அழிப்போம்.

அசாமில் உள்ள மூன்று ஆய்வகங்களில் நடக்கும் சோதனையால் மட்டும் வைரஸைக் கண்டு பிடித்து கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது. மத்திய சுகாதாரத்துறையின் உதவியும் தேவை. அண்டை மாநிலங்களிலிருந்து எந்தவிதமான பன்றிகளும், கால்நடைகளும் கொண்டுவர வேண் டாம். பன்றிகளின் இறைச்சி, எச்சில், ரத்தம், திசுக் கள் மூலம் இந்த வைரஸ் பரவும். இது மாவட்டங்க ளுக்கு இடையே பரவவில்லை. இந்த வைரஸ் ஒருபோதும் மனிதர்களைப் பாதிக்காது. தொற்று இல்லாத பகுதிகளில் இருந்து பன்றி இறைச்சியை உட்கொள்வதில் எந்தப் பிரச்ச னையும் இல்லை. விவசாயிகளுக்கு இது தொடர் பாக விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்க உள் ளோம். இதற்காக 13 மாவட்டங்களைத் தேர்ந்தெ டுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

;