tamilnadu

img

தினமும் 4 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.... 700 பேர் பலி...

மெக்ஸிகோ சிட்டி 
வடஅமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவிற்கு அருகில் உள்ள மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 20 நாட்களாக அங்கு கொரோனா பரவல் வேகம் மாறுபட்ட வேகத்தில் உள்ளது. தினமும் 4000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மெக்ஸிகோவில் 4 ஆயிரத்து 599 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 54 ஆயிரத்து 853 ஆக அதிகரித்துள்ளது. அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரே நாளில் மேலும் 730 பேர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு தினமும் அதிகரித்தாலும் மருத்துவ சிகிச்சையில் மெக்ஸிகோ அசத்தலாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 54 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 20ஆயிரத்து 375 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   

;