tamilnadu

img

ராஜஸ்தானை மிரட்டும் கொரோனா... பலி எண்ணிக்கை 100-ஆக உயர்வு  

ஜெய்ப்பூர் 
நாட்டின் வடமேற்கு எல்லை மாநிலமான ராஜஸ்தானில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வதால் மாநில மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக மாநிலத்தின் முக்கிய நகரான ஜெய்ப்பூர், கோட்டா, அஜ்மீர், பாலி ஆகிய நகரங்கள் கொரோனவால் உருக்குலைந்துள்ளன.

இந்நிலையில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 3 ஆயிரத்து 500-யை தாண்டியுள்ளது. குறிப்பாக ராஜஸ்தானில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை (1,523) அதிகமாக இருந்தாலும், பலி எண்ணிக்கை தாறுமாறாக உள்ளது. இன்று மட்டும் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 100-யை தாண்டியுள்ளது.