tamilnadu

img

100 ஆண்டு நிறைவடைந்த முதல் பயணிகள் விமானம்

புதுதில்லி:
ஐரோப்பாவில் முதல் பயணிகள் விமானம் பயன்பாட்டுக்கு வந்து 100  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.2 பேர் மட்டுமே செல்லக்கூடிய முதல் ஐரோப்பிய பயணிகள் விமானம் 1919ஆம் ஆண்டு பெர்லிங்கில் புறப்பட்டு ரஷ்யாவின் தேவவ் விமான நிலையத்தில்தான் இறங்கியது. இதை சிறப்பிக்கும் விதமாக ரஷ்யாவின் தேவவ் என்ற இடத்தில் 50-க்கும் மேற்பட்ட சிறிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.இந்த பழமையான விமான தளத்தில் ஜெர்மனி, ஸ்வீடன், போலந்து, சுவிட் சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் விமான உரிமையா ளர்களும், விமானிகளும் ஒன்று கூடி, தங்கள் விமான சாகச அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நூற்றாண்டு நிகழ்ச்சியில் விமான சாகசங்களும் நிகழ்த்தப்பட்டன. பொது மக்கள் விமானத்துக்குள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

;