இந்திய ஆளும் வர்க்கங்கள் 1990களில் இருந்தேவிவசாயிகளின் கடுமையான உழைப்புக்கேற்ற வருமானம் வேண்டும்; விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; இந்திய விவசாயத்தில் 80 சதவீதம் பேராக உள்ள சிறு குறு விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று உரத்த குரலில் பேசி வருகின்றன .ஆனால் இந்த முழக்கங்கள் எல்லாம் சும்மா வெளித்தோற்றம்தான். உண்மையில், கடந்த 30 ஆண்டுகளாக அரசின் விவசாயக் கொள்கைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதாகவே உள்ளன.
இப்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நல்ல லாபத்தில் விற்பதற்கான “சுதந்திரத்தை” அளித்து விட்டதாகவும் அதற்கான “தடைகளை” நீக்கி விட்டதாகவும் கூறிக்கொண்டு, உள்நோக்கத்துடன் மூன்றுவேளாண் விரோத சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் இந்திய விவசாயம் கார்ப்பரேட் மயமாகும் போக்கை விரைவுபடுத்தியுள்ளது.அரசுஏகபோகத்திலிருந்து வேளாண் சந்தைகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு வேளாண் விளைபொருள்விற்பனைக் கூடங்களை மூடப்படும். அரசின் குறைந்தபட்ச ஆதார விலை நிறுத்தப்படும். கார்ப்பரேட்டுகள் மற்றும்அவைகளின் முகவர்களின் கருணையை எதிர்பார்த்து வாழும் அவல நிலை விவசாயிகளுக்கு ஏற்படும்.
கார்ப்பரேட்டுகளின் துல்லியமான தாக்குதல் திட்டம்
வேளாண் ஒப்பந்த சாகுபடி, சமமற்ற பங்குதாரர்களான, உலகின் சர்வ வல்லமை மிக்க கார்ப்பரேட்டுகளுக்கும், சாதாரண விவசாயிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்படும். ஒப்பந்தத்தையும் தாண்டி, முன்கூட்டியே கணிக்க முடியாத அளவில் கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சிகளை விவசாயிகள் சந்திக்க நேரிடும் என்பது எனது ஆய்வில் தெரியவந்த உண்மையாகும்.விவசாயிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு கார்ப்பரேட் இயக்குனர்களின் கூட்டம் நடைபெறும். அதில் முதலாவதாக, அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனம் பெற்றாக வேண்டிய லாப இலக்கு நிர்ணயிக்கப்படும். எவ்வளவு கொள்முதல்- விற்பனை, அதற்கு நிறைவேற்றவேண்டிய நடைமுறைகளெல்லாம் முடிவு செய்யப்படும். விதைகளை சிங்கெண்டா (Syngenta), ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளை டியூ பாண்ட்(Du Pont) மற்றும் பேயர்(Bayer) போன்ற உலகின் முன்னணிநிறுவனங்களிடமிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களே கொள்முதல் செய்து ஒப்பந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்கான செலவினம் ஆகிய அனைத்தும் கணக்கிடப்படும்.
ஒரு ஏக்கரில் கிடைக்கும் மகசூல் மதிப்பிடப்படும். இறுதியாக ஒப்பந்த விவசாயி எவ்வளவு லாபம் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்படும்.
(பெப்சிகோ வேளாண் சந்தை தலைமை அலுவலர் கட்டுரையாளருக்களித்த பேட்டி)
கணக்கீடு (2008 ஆம் ஆண்டு) விளைபொருள் (உருளைக் கிழங்கு)
ஒரு ஏக்கருக்கான மகசூல் 1500 கிலோ
கொள்முதல் நிர்ணய விலை ரூ.2.50
மொத்தம் ரூ.37500
உற்பத்திச் செலவினம் (ஒரு ஏக்கருக்கு)
விதைகள் - ரூ. 3000
உழைப்பு - ரூ.7000
(நெகிழ்வுத் தன்மைக்குட்பட்டது)
உரம் பூச்சிக்கொல்லிகள் - ரூ. 3000
இயந்திர சாதனங்கள் - ரூ . 2000
மொத்தம் - ரூ. 15000
உறுதிப்படுத்தப்படும்
லாபம் (கழிக்க) 37,500(-) 15000
நிகர லாபம் - 22000
ஆனால், விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டிய நேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் நெறி முறையற்ற சூழ்ச்சியில் இறங்கும். ஒப்பந்தப்படி, விளைபொருட்கள் தரமானதாக இல்லை; இந்த ஆண்டில் அதிகமான விளைபொருட்கள் உற்பத்தியானதால் தேக்கமாகிவிட்டது என்று பல்வேறு காரணங்களைக் கூறும். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் விட்டு விடுவார்களோ என்ற பீதியில், விவசாயிஎந்த சமரசத்துக்கும் தயாராகி விடுவார். ஒரு கிலோ ரூ.2.50 என்று நிர்ணயிக்கப்பட்ட விலை, கிலோ ரூ.1.50 என விலை குறைக்கப்படும்.
யாருக்கு இழப்பு?
பஞ்சாப், சாங்ரூரில் ஒப்பந்த சாகுபடி செய்யாமல், சொந்தமாக கோதுமை பயிரிட்ட ஒரு குறு விவசாயியின் துயரக் கதை (2010 ஆம் ஆண்டு).
ஒரு ஏக்கர் மகசூல் - 20 குவிண்டால்
அரசு குறைந்த பட்ச ஆதார விலை ரூ. 1310 (குவிண்டால் ஒன்றுக்கு)
மொத்த வருமானம் ரூ.26200
உற்பத்திச் செலவினம்
இரண்டரை குவிண்டால் உரம் ரூ.3000
ஜிங்க். ரூ. 200
மூன்றுமுறை பூச்சிக்கொல்லிகள்
பயன்பாடு- ரூ .1500
விதை - ரூ. 800
நான்கு முறை நீர் பாய்ச்சிய வகையில் ரூ.800
உழைப்பு கூலி ரூ.3000
இதர செலவினம் 2000
மின்சாரம் - இலவசம்
மொத்த செலவினம் ரூ.11300
நிகர லாபம். ரூ. 26200(-) ரூ. 11300 ரூ.14900
ஆறு மாதம் குடும்பத்தோடு உழைத்த அந்த விவசாயிக்கு ஒரு ஏக்கரில் கிடைத்தது வெறும் 14,900 ரூபாய். ஒரு மாதத்திற்கு 2483 ரூபாய் மட்டுமே!எனில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஐவரும் முடிவின்றி வயலில் உழைத்ததற்கான ஊதியம் ஏதுமில்லை.இதுவும்கூட, அரசின் குறைந்த பட்ச ஆதார விலை, இலவச மின்சாரம் இருப்பதால்தான் கிடைத்த தொகையாகும். ஆனால் புதிய வேளாண் சட்டங்களால் இதுவும் ஒழித்துக் கட்டப்படும் போது,அந்த விவசாயி நிலைமை என்னாவது?
ஏற்கனவே கடனோடு வாழும் அந்த விளிம்பு நிலை விவசாயி உயிரை உடலில் ஒட்டி வைத்திருப்பதற்கு என்னதான் செய்யமுடியும்? தங்களின் துண்டு, துக்காணி நிலத்தையும் விற்றுவிட்டு குடும்பத்தோடு நகரத்துக்கு புலம்பெயர்வார்.வேளாண்துறையில், வளர்ச்சி என்ற பெயரில் அரசு மேற்கொள்ளும் அனைத்து திட்டங்களும் விவசாயிகளிடையே சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் மூலதன வருகை இந்த இடைவெளியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளரும், வேளாண் ஆய்வாளருமான பி.சாய்நாத் இந்திய விவசாயிகள் தற்கொலைபிரச்சனையை சோர்வின்றி ஆவணப்படுத்தி வருகிறார். விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறியுள்ளதால், சிறு குறு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
உற்பத்திச் செலவினம் அதிகரிப்பு, மானியங்கள் ரத்து, அரசு நடத்தும் சந்தைகள் மற்றும் அரசின் சேவைகள் அழித்தொழிப்பு ஆகிய காரணங்களால் சிறு குறுவிவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்ற
னர்.45% விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு விட்டனர்.
ஒப்பந்த சாகுபடி பாதுகாப்பு சட்டத்தின் நோக்கம்
தாக்குப்பிடிக்க முடியாத சிறு குறு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை பணக்கார விவசாயிகளிடம் விற்கச் செய்வதே வேளாண் விரோத சட்டங்களின் உண்மையான நோக்கம் ஆகும். வெகு சிலரிடம் நிலங்களை குவிப்பதும், வேளாண் மூலதனத்தை பலப்படுத்துவதும் இந்த சட்டத்தின் நோக்கமாகும். இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கும் நாசகர ஆயுதங்கள்தான் புதிய வேளாண் சட்டங்கள்.
கடந்த 30 ஆண்டு காலத்தில், உலக நாடுகளின் அனுபவங்கள் வேளாண் துறை தாராளமயத்தின் வாக்குறுதிகளான “சுதந்திரம் “, “நல்ல லாபம்” என்ற இரண்டு வாக்குறுதிகளும் பொய்யானவை என்று நிரூபித்துள்ளன. அந்த வாக்குறுதிகளுக்கு யாதொரு நம்பகத்தன்மையும் இல்லை என்பதே ஒப்பந்த சாகுபடி சட்டம் கொண்டுவரப்பட்ட அனைத்து நாடுகளின் அனுபவமாகும். விவசாய விளைபொருட் களை லாபத்தில் விற்பதற்கான சுதந்திரம் எனும் பொய்யான முழக்கங்கள் தற்போது இந்தியாவில் புகலிடம் தேடியுள்ளது. இந்த வேளாண் விரோத சட்டம் முதலும் முடிவுமாக கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.
ஏன் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் இந்தியாவுக்கு வருகின்றன? தொழிலாளர்களின் கடுமையான உழைப்பை பொருட்படுத்தாத மலிவான ஊதியம், குறைவான உற்பத்திச் செலவினம், தினந்தோறும் உயிர்வாழ்வதற்கான உணவு செலவுத் தொகை கிடைத்தாலே போதும் எனும் நிலையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளதால் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் வருகின்றன.விளிம்பு நிலையில் வாழும் விவசாயிகளும், அடித்தட்டில் வாழும் மக்களும் அரசு சொல்கின்ற வளர்ச்சிக்காக போராடவில்லை. தங்களின் அன்றாட பிழைப்புக்காக போராட்ட வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஒரு அரசின் சவால்மிக்க பணி எது? சிறு, குறு விவசாயிகளுக்கு கண்ணியத்துடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் கொள்கைகளும், சட்டங்களுமே தேவை. அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி மற்ற தொழிலைநோக்கிச் செல்ல நேரிட்டால், அவர்களின் குழந்தைகளும் கடன் வலையில் விழுந்து வீழ்ந்து விடக்கூடாது. அவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
==ரித்திகா ஸ்ரீமலி==
தமிழில் : ம.கதிரேசன்