சென்னை:
ஹூண்டாய் தொழிற்சாலை வரும் 19 ஆம் தேதி வரை மூடப்படுவதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், கார்களை உற்பத்தி செய்யும் ஹூண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 2020-ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதற்காக ஜூன் 15 முதல் வரும் 19 ஆம் தேதி வரை தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் தொழிற்சாலையில் உள்ள நூற்றுக் கணக்கான ரோபோக்கள், இயந்திரங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டு, அதிக செயல்திறன் உள்ள புதிய தொழில்நுட் பங்கள் பொருத்தப்பட்டு புதிய ரக கார்களை உற்பத்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளன. இது ஆண்டு தோறும் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.