tamilnadu

img

அரசு போக்குவரத்துக்கு ஜெர்மன் வளர்ச்சி வங்கி ரூ.1,600 கோடி கடனுதவி

சென்னை, செப்.27- புதிதாக 2,213 பேருந்துகளும், 500 மின்சாரப் பேருந்துகளும் வாங்க, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கு, ஜெர்மன் வளர்ச்சி வங்கி  ரூ. 1,580 கோடி  கடனுதவி அளிக்கிறது. லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சி-40 என்கிற பன்னாட்டு முகமைக்கும், தமிழ்நாடு அரசுப்  போக்குவரத்துத் துறைக்கும் கடந்த ஆண்டு  மார்ச் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லு நர்கள் மற்றும் ஆலோசகர்களைக்  கொண்டுள்ள இந்த அமைப்பின் வழிகாட்டு தலின்படி, தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக, ஜெர்மன் வளர்ச்சி வங்கியின்  கடனுதவியுடன் ரூ. 5,890 கோடி செலவில்  12,000 புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்து களையும், 2,000 மின்சாரப் பேருந்துகளை யும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ. 1,580 கோடி மதிப்பீட்டிலான பிஎஸ்-6 தரத்திலான 2,213  புதிய பேருந்துகளும், 500 மின்சாரப் பேருந்துகளும் வாங்குவதற்கான திட்ட ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும், ஜெர்மன் வளர்ச்சி வங்கிக்கும்  இடையே இந்த திட்ட ஒப்பந்தம் கையெ ழுத்தானது.  இதன் மூலம், மின்சார வாகனங்  களுக்கான மின்ஏற்று கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து துறையின் செயல்பாட்டினை மேம்படுத்திட மென்  பொருள் மற்றும் வன்பொருள் கொள்முதல்  செய்தல், பயணிகள் தகவல் அமைப்பை நிறுவுதல், உலகத்தரத்திலான ஆலோசகர் களின் உதவிகளை பெறுதல், பணமில்லா பயணச் சீட்டு முறை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

;