tamilnadu

img

சிரியாவில் மீண்டும் குண்டுவெடிப்பு....11 குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

ஆப்ரின்
மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. அரசுக்கு ஆதரவான சவுதி கூட்டுப்படையும், அரசுக்கு எதிரான குர்தீஷ் கூட்டுப்படையும் யுத்தம் நடத்தி வருகின்றன. இதற்கிடையில் தீவிரவாதிகள் வேறு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சிரிய தேசமே போர்க்களமாகக் காட்சி அளித்து வருகிறது. கொரோனா தாக்குதல் காரணமாக உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா சபை வலியுறுத்தியும் பலனில்லை. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தாக்குதல் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சிறியாவின் முக்கிய நகரான ஆப்ரினில் எண்ணெய் லாரி மீது நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில்  11 பேர் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த சிலமணிநேரங்களில் மஹ்மூதியே பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை விபரம் வெளியாகவில்லை. இந்த தொடர்   குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தீவிரவாதிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு குர்தீஷ் தலைமையிலான கூட்டுப்படை ஆப்ரின் நகரைக் கைப்பற்றியது. இதன் விளைவாகத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  

கொரோனா பாதிப்பு 
குண்டுவெடிப்புக்குப் பயந்து வீடுகளுக்குள் மக்கள் முடங்கியிருப்பதால் சிரியாவில் கொரோனா பரவல் பெரியளவில் இல்லை. எனினும் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர்.  
 

;