tamilnadu

img

தொடர் போராட்டத்தினால் அல்ஜீரியாவின் குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து இறங்கினார்

குடியரசுத்தலைவருக்கு எதிரான தொடர் போராட்டத்தின் விளைவாக 20 வருடங்களுக்கு பிறகு அல்ஜீரியாவின் குடியரசுத்தலைவர் தனது பதவியிலிருந்து இறங்கியுள்ளார்.


வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் குடியரசுத் தலைவராக அப்தெலஸி பௌடீபிளிகா கடந்த 20 வருடங்களாக நீடித்து வந்தார். அந்நாட்டு மக்கள் குடியரசுத்தலைவரின் ஆட்சிமுறையின் மீதும், நாடு முழுவதும் நிலவும் ஊழலினாலும் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் மக்கள் கடந்த ஒன்றரை மாதமாக குடியரசுத்தலைவரை பதவி விலகக்கோரி தன்னெழுச்சி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.


போராட்டத்தின் தீவிரம் மிக அதிகமானதைத் தொடர்ந்து அல்ஜீரியாவின் குடியரசுத் தலைவர் தனது பதவியிலிருந்து இறங்குவதாக அறிவித்துள்ளார். இதை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கொண்டாடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குடியரசுத்தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்வதோடு மட்டுமல்லாமல் அரசின் மொத்த நடைமுறையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை கடுமையாக வைத்து வருகின்றனர்.


;