tamilnadu

img

VHP நிர்வாகி மீது குண்டர் சட்டம்

விஷ்வ இந்து அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது
 பாதிரியாரை மிரட்டி பணம் கேட்குமாறு  வினோத் என்பவரிடம், முத்துவேல் கூறும் வீடியோ வெளியானது. இந்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியினர் உத்தரவின்படி, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
  பாதிரியாரை மிரட்டி ரூ.25 லட்சம் பறிக்க முயன்றது  இரு மதத்தினரிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டது, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..
 

;