tamilnadu

img

அறுவடை நெல்லுடன் சாலையோரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள் அரசு கொள்முதல் செய்யக் கோரிக்கை

அரியலூர், பிப்.23- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் தாலுகா பழூர் நெல்  கொள்முதல் கிடங்கில் பல நாட் களாக நெல் மணிகள் அனைத்தும் சாலையோரத்தில் போதிய பாது காப்பின்றி கொட்டி வைக்கப்பட்டி ருக்கிறது. இதுகுறித்து நெல் கொள் முதல் நிலைய அலுவலர் கூறுகை யில், ஆட்சியர் உத்தரவால் ஒரு நாளை க்கு 800 முட்டைக்கு மேல் கொள்முதல் செய்யக் கூடாது. இன்னும் கடந்த ஒரு வாரத்திற்கு எடுப்பதற்கு நிதி இல்லை.  நெல் மணிகளை கொண்டு வந்த விவசாயிகள் அவரவர் பாதுகாப்பில் அந்த வைத்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரி வித்தார். இந்நிலையில் விவசாயிகள் மிகவும் சிரமத்துடன் நெல் மணி களை இரவு பகலாக காவல் காத்துக் கொண்டு இருக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம், விவசாயிகளின் நிலை அறிந்து நெல் கொள்முதல் செய் வதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோவன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

;