tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிதியளிப்பு கூட்டம்

அரியலூர், செப்.19- அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம், நிதியளிப்பு விழா ஸ்ரீபுரந்தான் செக்கடியில் சந்தோசம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு துவக்க உரையாற்றினார். வீ.கலிய மூர்த்தி மாணிக்கம் தங்கையன் வேல் முருகன் சாமிநாதன் சங்கர் சண்முகம் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, அரியலூர்- பெரம்ப லூர் மாவட்ட செயலாளர் ஆர்.மணி வேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் மாவட்ட குழு உறுப்பி னர் எ.தங்கராசு ஒன்றிய செயலாளர் மாவட்ட குழு உறுப்பினர் என். பழனி வேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.