tamilnadu

img

சர்வதேச அறிவியல் திருவிழா

சென்னை, நவ. 9- மேற்குவங்க மாநிலத் தலை நகர் கொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழாவைப் பிரத மர் நரேந்திர மோடி நவம்பர் 5  அன்று தொடங்கி வைத்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் விஞ்ஞான் பாரதி சார்பில் நடத்தப்படும் இத்திருவிழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் அறி வியல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும்  அனைத்து மாநில அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கள் பங்கேற்றனர். 2015ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் அறிவியல் திருவிழாவின் 2019 ஆம் கருப்பொருளாக ‘அறி வியலில் ஆய்வு, புதிய கண்டு பிடிப்பு மூலம் நாட்டை பலப்ப டுத்துதல்’ என்று அறிவிக்கப்பட்டு அது தொடர்பான அறிவியல் கிராமம், இளம் விஞ்ஞானிகள் மாநாடு, விஞ்ஞானிகா இலக்கி யத் திருவிழா, வேளாண் விஞ் ஞானிகள் சந்திப்பு, அறிவியலில் சிறந்து விளங்கு வோர்க்கான சந்திப்பு மற்றும் நேருக்கு நேர், அரசு சாரா அமைப்புகளின் கலந்  தாய்வு உட்பட 28 வெவ்வேறு  நிகழ்வுகள் இந்த திருவிழாவில் இடம்பெற்றன.

நவம்பர் 5 முதல் 8 வரை நடை பெற்ற இத்திருவிழாவில் 1200 விஞ்ஞானிகள், விவசாயிகள், அறிவியலாளர்கள், பெண்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து விஞ்ஞானி கள் பங்கேற்றனர். புதுவையிலிருந்து அறிவியல் ஆசிரியர்கள் ஜீவானந்தம் அரசு  மேல் நிலைப்பள்ளி குலசேகரன், மேட்டுப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளி அனிதா, ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேனி லைப் பள்ளி கணேசன், அரையூர்  அரசு மேல் நிலைப் பள்ளி சுரேஷ்,  காட்டேரிக்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளி ராஜ்குமார், முதலி யார்பேட்டை அர்ச்சுன சுப்புராய  நாயக்கர் நடு நிலைப் பள்ளி அர விந்தராஜா, ரெட்டியார்பளையம் மக்கள் தலைவர் சுப்பையா அரசு உயர் நிலைப்பள்ளி பாரதிராஜா மற்றும் காலாப்பட்டு அரசு தொடக்கப் பள்ளி சோமசுந்தரம், அறிவியல் ஆர்வலர் புவி வேளாண் உயிரி கூட்டமைப்பின் இயக்குநர் அருண் நாகலிங்கம் மற்றும் காலப்பட்டு பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவிகள் 20 பேர் சர்வதேச அறிவியல் திரு விழாவில் பங்கேற்றனர்.

அறிவியல் ஆசிரியர் ராஜ் குமார் மடிப்பு நுண்ணோக்கி ஆய்  வறிக்கையை விஞ்ஞானிகா இலக்கிய அறிவியல் திருவிழா வில் சமர்பித்தார். புவி வேளாண் அறிவியல் மன்றத்தின் செயல் பாடுகள் பற்றி இயக்குனர் அருண் நாகலிங்கம் அரசு சாரா அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் புதுமையான தொழில் நுட்பங்கள் பற்றி கருத்து கள் பகிர்ந்தார்.

கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் மையங்  கள், அறிவியல் அருங்காட்சிய கம், புராதன வரலாற்று சின்னாங்  கள் மற்றும் திருவிழாவில் இடம் பெற்ற அறிவியல் தொடர்பான செயல்பாடுகளையும் புதுவை யில் இருந்து பங்கேற்ற அறிவிய லாளர்கள் பார்வையிட்டு அதற் கான விளக்கங்களையும் பெற்ற னர். சர்வதேச மற்றும் தேசிய ஆய்வு மையங்களைச் சார்ந்த  விஞ்ஞானிகளுடன் கலந்துரை யாடினர். மேலும் இத்திருவிழாவில் 3  கின்னஸ் சாதனைகளும் நிகழ்த்  தப்பட்டன. ஒரே நேரத்தில் 550க்கும் அதிகமான எண்ணிக்கை யில் வாழைப்பழத்தில் மரபணு  பகுப்பாய்வு செய்து சாதனை, 1750 பேர் உருவாக்கிய இயற்பிய லில் நிறமாலை உருவாக்கி சாதனை, 268 மாணவர்கள் இரண்டு மணி  நேரத்தில் ரேடியோ  உருவாக்கி சாதனை ஆகி யவை இந்த அறிவியல் திருவிழா வில் நிகழ்த்தப்பட்டது இத்திரு விழாவின் சிறப்பாகும்.

;