அரியலூர், மார்ச் 5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட ஒன்றி யங்களில் முந்திரி சாகுபடி 45,000 ஏக்கருக்கு மேல் விவசா யம் செய்யப்படுகிறது. கடந்தா ண்டு சரியான சாகுபடி கிடைக்க வில்லை. அதற்குக் காரணம் மானிய விலையில் முந்திரி விவ சாய இடுபொருள், பூச்சி மருந்து கள் உள்ளிட்டவை வழங்கப்பட வில்லை. இந்தாண்டு முந்தரி துளிர் விட்டு காய்க்கும் தருணத்தில் உள்ளது. குறிப்பாக வெண்மன் கொண்டான் வாரியங்காவல், இலையூர் உள்பட 80-க்கு மேற் பட்ட கிராமங்களில் பயிரிடப் பட்டுள்ளது. எனவே மானிய விலையில் பூச்சி மருந்துகள், விவசாய இடுபொருட்கள், ஊட்டச்சத்து மருந்துகள் உள்ளிட்டவை வழங்க மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செய லாளர் கே.மகாராஜன், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.