tamilnadu

அரியலூர், புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

அக்.14 கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

அரியலூர், அக்.3- அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையினரால், கால் மற்றும் வாய் நோய் தடுப்புத் திட்டம் 17-வது சுற்றின் கீழ் 14.10.2019 முதல் தொடங்கி 21 நாட்களுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஆதலால், கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு, தங்கள் கால்நடைகளை கொடிய நோய் வராமல் பாதுகாக்கும்படி, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

மருத்துவ கண்காட்சி விழா

பொன்னமராவதி, அக்.3- பொன்னமராவதி துர்கா மருத்துவ மனையில் 26வது ஆண்டு விழா மற்றும் மருத்துவ கண்காட்சி துவக்க விழா நடை பெற்றது. பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் அழகேசன் வரவேற்றார். தொடர்ந்து கண்காட்சி அரங்குகளை காவல் ஆய்வாளர் கருணாகரன், அருட்ச கோதரி மதலைமேரி, மருத்துவர்கள் மதிய ழகன், மகேஸ்வரி,  தியாகராஜன், விக்னேஷ்,  முருகேசன், ரோட்டரி சங்கத் தலைவர் காமாட்சி, கோவனூர் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர். கண்காட்சியில் மனித உடற்கூறு ஆய்விற்கு உண்டான அனைத்து பாகங்களும் செயல்விளக்கத்துடன் இடம்பெ ற்றன. நிர்வாக அலுவலர் சிவபாலன் நன்றி கூறி னார்.