tamilnadu

img

அரக்கோணம்,புதுச்சேரி,விழுப்புரம் மற்றும் கடலூர் முக்கிய செய்திகள்

அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன், சோளிங்கர் தொகுதி வேட்பாளர் அசோகன் ஆகியோரை ஆதரித்து வாலாஜா மற்றும் சோளிங்கர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.\\


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்குகள் கேட்டு பாகூரில் சிபிஎம் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலியன், சரவணன், அரிதாஸ்,செல்வராஜ், சாம்பசிவம், முத்துலிங்கம், வெங்கடாச்சலம், கவுசிகன், சிபிஐ சார்பில் ராமமூர்த்தி, கலியமூர்த்தி, மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் உரையாற்றினார். பேராசிரியர் சபாபதிமோகன் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் உள்ளனர்.


கடலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரமேஷ் கூட்டணி கட்சிகளுடன் கடலூர் நகரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

;