tamilnadu

img

தடை செய்யப்பட்ட ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா - அதிர்ச்சியில் உலக நாடுகள்

தடை செய்யப்பட்ட ஏவுகணையை, அமெரிக்கா மீண்டும் சோதனை செய்துள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கடந்த 1987-ஆம் ஆண்டு, முக்கியமான அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. அதன்படி, இரண்டு நாடுகளும் 500 கிலோ மீட்டர் முதல் 5500 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை, பாதுகாப்பு கருதி இனி சோதனை செய்ய கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை 32 வருடங்கள் இரு நாடுகளும் மிக தீவிரமாக கடைபிடித்து வந்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி அமெரிக்கா ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியதால் ஒப்பந்தம் ரத்தானதாக ரஷ்யா அறிவித்தது. 

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் நிக்கோலாஸ் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. மேலும், 500 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கை துல்லியமாக இந்த ஏவுகணை தாக்கியதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது உலக நாடுகளுக்கு இடையே பெறு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

;