tamilnadu

img

சபாநாயகருடன் கைகுலுக்க மறுத்த டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தின் போது அதிபர் டிரம்ப் சபாநாயகருடன் கை குலுக்க மறுப்பு தெரிவித்தார்., இதையடுத்து சபாநாயகர் டிரம்ப் உரையை கிழித்து எரிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்., 
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி-யில்  நடக்கும் சிறப்பு கூட்டத்தில் அந்த நாட்டின் அதிபர் நாட்டின் நிலை மற்றும் வளர்ச்சி குறித்து  சிறப்புரையாற்றுவது  வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணைக்கு பின், நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் டொனால்ட் டிரம்ப். பதவிநீக்க விசாரணைக்கு பின் தன் மீது புகாரளித்த ஜனநாயக கட்சியினரை முதல் முறையாக டிரம்ப் சந்திக்க இருந்தார். மேலும் அடுத்து நடைபெற உள்ள  அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடக்கும் கூட்டம் இது  என்பதால் கூட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. 
அதிபர் டிரம்ப் தனது உரையை துவங்கும் முன் தன் மீது புகாரளித்ததில் பெரும்பங்காற்றிய அவைத்தலைவர் நான்சி பிலோசி கைகுலுக்க முன்வந்தார். ஆனால் அவருடன் கைகுலுக்க டிரம்ப் மறுத்து விட்டா. இதையடுத்து ட்ரம்ப் தனது உரையை முழுவதுமாக முடித்தார், அப்பொழுது, அவைத்தலைவர் நான்சி பிலோசி, தன்னிடமிருந்த அதிபரின் உரை அடங்கிய தாள்களை கிழித்தார், இது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, பிலோசி “இது தான் என்னால் கொடுக்கமுடிந்த குறைந்தபட்ச மரியாதை” என்று கூறினார்.