tamilnadu

img

கொரோனவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி.... ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது

மன்டாலுயோங் 
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாள் ஊரடங்கை கடைப்பிடித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 2.2 பில்லியன் டாலர் (சுமார் 16,500 கோடி ரூபாய்) நிதி ஒதுக்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் உறுதி அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூடியதாவது,"‘இந்தியாவின் அவசர தேவைக்கு ஆதரவளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி அந்நாட்டின் சுகாதாரத் துறைக்கு உடனடியாக 2.2 பில்லியன் டாலர்களை அனுப்ப உள்ளோம். தொற்றுநோயினால் ஏழைகள், முறைசாரா தொழிலாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மற்றும் நிதித்துறை போன்ற துறைகள் மீதான   பொருளாதார தாக்கத்தைத் தணிக்க உதவுகிறோம்.

தேவைப்பட்டால் இந்தியாவுக்குக் கூடுதல் நிதி அளிக்க தயாராக உள்ளோம். மேலும் இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசர உதவி, கொள்கை அடிப்படையிலான கடன்கள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதிகளை விரைவாக விநியோகிக்க வசதியாக பட்ஜெட் ஆதரவு உள்ளிட்ட அனைத்து நிதி வழிமுறைகளையும் பரிசீலனை செய்வோம்’ என்று அசகாவா கூறினார்.
ஆசிய வளர்ச்சி வங்கி தலைமையகம் பிலிப்பைன்ஸில் உள்ளது. 
 

;