மாஸ்கோ, ஜூன் 22- ரஷ்யாவின் மூன்றாவது பெரிய நகரமான நோவோஸிப்ரிக்ஸில் ஸ்டாலின் சிலையை ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவியுள்ளது. யுத்தத்தின் மூலம் உலகையே மிரட்டிக் கொண்டிருந்த ஜெர்மனி ஹிட்லரின் நாஜிப் படைகளை வெற்றிகண்ட மே 9 அன்று ஜோசப் ஸ்டாலினின் சிலை நிறுவப்பட்டது. ரஷ்யாவில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்டாலினின் இதுபோன்ற 10 உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மாவீரன் ஸ்டாலினுக்கு ரஷ்ய மக்களிடையே ஆதரவு பெருகிவருகிறது. 2016 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பின்படி 54 சதவீதமாக இருந்த மக்கள் ஆதரவு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.