tamilnadu

img

லண்டன் நீதிமன்றத்தில்  அனில் அம்பானியிடம் விசாரணை

லண்டன்:
3 சீன வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீதுலண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அனில் அம்பானியின் சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் காணொலி காட்சி மூலம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மும்பையில் இருந்தபடி அவர் பதிலளிக்கையில், ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் தான் ஆடம்பரமாக வாழ்வதாக கூறப்படுவதாகவும், ஆனால் தான் எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறிக்கொண்டார்.