tamilnadu

img

அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய தீவு

காலநிலை மாற்றம் காரணமாக பிரம்மபுத்திரா நதியை ஒட்டிய இந்திய தீவு ஒன்று மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் அருகே உள்ள மஜுலி தீவு, பிரம்மபுத்திரா நதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மிகப்பெரிய தீவு இன்று அழிவு நிலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. மஜுலி தீவில் சுமார் 1.70 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் உயரும் நீர் மட்டம் இந்தத் தீவை கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடித்து வருகிறது. இதனால், விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. மழை பெய்தால் அத்தீவு மக்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவதால் பலரும் புலம் பெயரும் நடைமுறையையும் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

மஜுலி தீவில்தான் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மடம் ஒன்று உள்ளது. சுமார் 1,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மடம் தற்போது அழிவு நிலையை எட்டியுள்ளது. ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு வெறும் 515 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்தத் தீவு வருகிற 2040-ஆம் ஆண்டில் முற்றிலும் அழிந்துவிடும் என்கிற எச்சரிகையும் விடுக்கப்பட்டுள்ளது.

;