tamilnadu

img

ஆசிய மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் வினேஸ் போகத், சாக்சி மாலிக்கிற்கு வெண்கலம்

இன்று நடந்த ஆசிய மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் வினேஸ் போகத் மற்றும் சாக்சி மாலிக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.


இந்தியாவின் வினேஸ் போகத் 53 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்த போட்டியில் சீனாவின் கியான்யூ பங்_யை தோற்கடித்து வெண்கலம் வென்றார். இதைத்தொடர்ந்து நடந்த 62கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் இந்தியாவின் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீராங்கனை சாக்சி மாலிக் வடகொரிய வீராங்கனை ஹியான் யோங்முன்_யை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.