tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா - 2019

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

வெற்றி 50%  -   50% வாய்ப்பு

இடம் : சவுதாம்ப்டன்  
நேரம் : பிற்பகல் 3 மணி

இரு அணிகளும் சமபலத்தில் உள்ளதால் வெற்றி, தோல்வி குறித்து முன்கூட்டியே கணிக்க முடியாது. தென் ஆப்பிரிக்காவின் முன்னணிபந்துவீச்சாளர்களான ஸ்டெய்ன், நிகிடி ஆகியோர் காயத்தால் விலகியுள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் சாதகத்தை உருவாக்கும். உலகக்கோப்பைதொடரை வெற்றியுடன் துவங்க இந்தியஅணியும், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் தென்ஆப்பிரிக்கா அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

ஆடுகளம் எப்படி? 

சவுதாம்ப்டன் மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் என்றாலும்பிட்ச் மையத்தை அடிக்கடி கண்காணித்தால் தான் ரன் வேட்டை நிகழ்த்த முடியும். ஸ்விங் சிறப்பாக எடுபடும்.பவுன்சர் மிதமாக எகிறினாலும் நேராக நெஞ்சிற்குத் தான் பாயும்.

வீரர்கள் விபரம் :
(ஆடும் லெவன் அல்லாதது) 
 

இந்தியா

விராட் கோலி (கேப்டன்), ரோஹித்சர்மா, சிக்கர் தவான், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங்தோனி (விக்.,), தினேஷ் கார்த்திக் (விக்.,), கே.எல். ராகுல், முகமது ஷமி,ஜாஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சஹால்,குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார்.  

தென் ஆப்பிரிக்கா 

பாப் டு பிளஸிஸ் (கேப்டன்), எய்டன்மார்க்ராம், டேவிட் மில்லர், ஹாசிம் அம்லா, ரஸ்ஸி வான்டெர் டூசன், ஜீன்-பால் டுமினி, ஆன்டிலே பெஹ்லுக் வாயோ, கிறிஸ் மோரிஸ், டிவைன் பிரெடோரியஸ். குயின்டன் டி காக் (விக்.,),டேல் ஸ்டெய்ன், லுங்கி நிகிடி, இம்ரான்தாஹீர், காகிஸோ ரபடா, தப்ரியாஸ் ஷம்ஸி.காயம் : லுங்கி நிகிடி, டேல் ஸ்டெய்ன்(ஆடும் லெவனுக்கு வாய்ப்பு இல்லை)

சேனல்கள் 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (எச்டி வகையிலும்), டிடி ஸ்போர்ட்ஸ், இந்திய வானொலி (சிறப்பு), ஹாட் ஸ்டார் (கணக்கு இல்லாதவர்கள் 5 நிமிடம் இலவசமாக கண்டுகளிக்கலாம்).