tamilnadu

img

ஊரடங்கில்  வாடிவரும் ஏழைகளுக்கு தோள் கொடுத்த எல்.ஐ.சி ஊழியர் சங்கம்

விருதுநகர்:
விருதுநகர் ஒன்றியப் பகுதியில் வறுமையில் வாடிவரும் ஏழை,  எளிய மக்களுக்கு எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினர் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதத்தில்  தமிழக  அரசு  144  தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால், ஏழை,எளியோர் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில், வறுமையில் வாடும் அவர்களுக்கு உதவிட  அகில இந்திய ஆயுள் காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம்  முன் வந்தது. இதையடுத்து,  விருதுநகர் ஒன்றியம்  சின்னமூப்பன்பட்டி, குந்தலப்பட்டி மற்றும்  சூலக்கரை   பகுதிகளில் வாழும் 130 குடும்பங்களுக்கு    தலா 5 கிலோ அரிசி வீதம் வீடு,வீடாகச்சென்று வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு எல்.ஐ.சி ஊழியர் சங்க நிர்வாகிகள் பி.கே.பவளவண்ணன், உமேஷ்ரத்தன் ,பாபு ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்  தலைமை வகித்தனர்.சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேலு, ஒன்றியகுழு உறுப்பினர் பி.ராஜா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சாராள்,  கிளைச் செயலாளர்கள் .சுடலை, ஜெ.ஜே.சீனிவாசன்,   வார்டு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை   தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார்  செய்திருந்தார்.